சதம் விளாசிய மகிழ்ச்சியில் சல்மான் அகா படம் | AP
கிரிக்கெட்

முதல் ஒருநாள்: சதம் விளாசிய சல்மான் அகா; இலங்கைக்கு 300 ரன்கள் இலக்கு!

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 299 ரன்கள் எடுத்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 299 ரன்கள் எடுத்துள்ளது.

இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் இன்று (நவம்பர் 11) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பாகிஸ்தான் முதலில் விளையாடியது.

சதம் விளாசிய சல்மான் அகா

முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 299 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் சிறப்பான ஆட்டத்த்தை வெளிப்படுத்திய சல்மான் அகா சதம் விளாசி அசத்தினார். அவர் 87 பந்துகளில் 105 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 9 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஹுசைன் டாலட் 62 ரன்களும், முகமது நவாஸ் 36 ரன்களும் எடுத்தனர்.

இலங்கை தரப்பில் வனிந்து ஹசரங்கா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அஷிதா ஃபெர்னாண்டோ மற்றும் மஹீஷ் தீக்‌ஷனா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

300 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்குகிறது.

Batting first, Pakistan scored 299 runs for the loss of 5 wickets in the first ODI against Sri Lanka.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடிகால் மாஸ்டா் பிளான் திட்டத்திற்கான நிதியுதவிக்கு உலக வங்கியை நாடும் தில்லி அரசு

3.2.1976: சென்னை கோட்டையில் அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை

காங்கயத்தில் ரூ.73 ஆயிரத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

வெறுப்பைக் கைவிடுங்கள்; இணைந்து செயல்படுவோம்: காங்கிரஸுக்கு பாஜக அழைப்பு

சொத்து வரி மன்னிப்புத் திட்டம் பிப்.28 வரை நீட்டிப்பு: எம்சிடி

SCROLL FOR NEXT