தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் துருவ் ஜுரெல் இடம்பெற்றுள்ளார்.
நிதீஷ் ரெட்டி காயம் காரணமாக விலகியதால் துருவ் ஜுரெல் பிளேயிங் லெவனில் விளையாடுவார் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகளில் விளையாடுகின்றன.
முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் வரும் நவ.14ஆம் தேதி தொடங்குகிறது. இது குறித்து இந்தியாவின் துணை பயிற்சியாளர் ரின் டென் டோஷேட் கூறியதாவது:
எங்களுக்கு நல்ல காம்பினேஷனில் வீரர்கள் இருக்கிறார்கள். பெங்களூரில் கடந்த வாரத்தில் தெ.ஆ. ஏ அணிக்கு எதிராக துருவ் ஜுரெல் இரண்டு சதங்கள் அடித்தார்.
கடந்த ஆறு மாதங்களாக சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். இந்த வாரம் அவர் கண்டிப்பாக விளையாடுவார்.
போட்டியை வெல்ல திட்டமிடுவதே எங்களின் முக்கியமான குறிக்கோள். நிதீஷ் மீதான மதிப்பு மாறப்போவதில்லை. அவருக்கு ஆஸ்திரேலியாவில் போதுமான நேரம் கிடைக்கவில்லை.
சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு பார்த்தால் இந்த வாரம் அவருக்குப் பதிலாக துருவ் ஜுரெல் விளையாடலாம் என்றார்.
உள்ளூர் போட்டிகளில் துருவ் ஜுரெல் 140 & 1, 56 &125, 44 & 6, 132 & 127 ரன்கள் எடுத்துள்ளார்.
நம்.8-இல் ரிஷப் பந்த் விளையாடுவார் என்பதால் துருவ் ஜுரெல் பேட்டராக மட்டுமே களமிறங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.