ஸ்டோக்ஸ் மற்றும் ரூட்டை கிண்டல் செய்த தி வெஸ்ட் ஆஸ்திரேலியன் பத்திரிகையின் முதல்பக்கம்.  படம்: தி வெஸ்ட் ஆஸ்திரேலியன் பத்திரிகை.
கிரிக்கெட்

ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸை மீண்டும் சீண்டிய ஆஸ்திரேலிய ஊடகங்கள்.!

இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோ ரூட் இருவரையும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் கிண்டல் செய்துள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் முன்னணி வீரர் ஜோ ரூட் இருவரையும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் மீண்டும் சீண்டும் முயற்சியில் களமிறங்கியுள்ளன.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட மிகவும் புகழ்மிக்க ஆஷஸ் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் 21 ஆம் தேதி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் கிரிக்கெட் திடலில் துவங்குகிறது.

இந்தத் தொடருக்கு இன்னும் 10 நாள்களுக்கு குறைவாகவே உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி வீரர்கள் உள்ளூர்ப் போட்டிகளான ஷெபீல்டு ஷீல்டு தொடரிலும், இங்கிலாந்து வீரர்கள் இங்கிலாந்து லயன்ஸ் அணியுடனும் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், இங்கிலாந்து வீரர்களை சீண்டும் விதமாக தி வெஸ்ட் ஆஸ்திரேலியன் பத்திரிகையில் சர்ச்சைக்குரிய வாசகங்களுடன் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த 10 ஆம் தேதி பயிற்சிக்காக இங்கிலாந்து வீரர்கள் ஆஸ்திரேலியா சென்றனர். பாஸ் பாலுக்கு (Bazz Ball) பெயர் பெற்றவரான கேப்டன் பென் ஸ்டோக்ஸை “Baz Bawl” எனப் பெயரிட்டு கிண்டல் அடித்துள்ளனர்.

“Baz Bawl” என்பது கதறு..கதறு... உரக்கக் கத்தி அழு என்றும் குறிப்பிடப்படுகிறது. அதுமட்டுமின்றி, ‘இங்கிலாந்தின் திமிர் பிடித்த கேப்டன் பாஸ் பாலால் ஆஷஸை வெல்ல முடியும் என்று நினைத்து பெர்த்துக்கு வந்துள்ளார்’ என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஸ்டோக்ஸை கிண்டல் செய்யும் ஆஸ்திரேலிய பத்திரிகையின் முதல்பக்கம்.

அதேபோல, தி வெஸ்ட் ஆஸ்திரேலியன் பத்திரிகையில் திங்கள் கிழமை வெளியான முதல் பக்கத்தில், ஜோ ரூட் படத்துடன் “Average Joe” - சராசரி ஜோ என்று குறிப்பிட்டுள்ளனர். [Average Joe என்பது தொலைக்காட்சி நிகழ்ச்சி]

அதுமட்டுமின்றி, “தாய் மண்ணில் ஹீரோவாகவும், ஆஸ்திரேலிய மண்ணில் ஹீரோவைப் போல நடிப்பவர். ஆஷஸ் போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்தின் சிறந்த பேட்ஸ்மேனை பதறவைக்கிறது அவரது புள்ளிவிவரங்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

சர்வதேச டெஸ்ட் தொடரில் 13,500 ரன்களைக் குவித்திருக்கும் ஜோ ரூட், டெஸ்ட் ஃபார்மெட்டில் அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் இருக்கும் சச்சின் டெண்டுல்கரை முந்துவதற்கு அவருக்கு இன்னும் 2500 ரன்களே தேவையாக இருகின்றன.

இருப்பினும், ஆஸ்திரேலிய மண்ணில் ஜோ ரூட் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இதுவரை 39 சதங்களை விளாசியிருக்கும் ஜோ ரூட், ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடிய 14 போட்டிகளில் ஒரு சதம்கூட விளாசியது கிடையாது. மேலும், 35.68 ரன்களையே சராசரியாகக் கொண்டுள்ளார். இதனை சாதகமாகப் பயன்படுத்தி ஆஸ்திரேலிய ஊடகங்கள் கிண்டல் செய்துள்ளன.

ஆஷஸ் தொடரின்போது பேட்டிங், பந்துவீச்சு மட்டுமின்றி, ஆஸ்திரேலியர்கள் மனரீதியிலான, ஆத்திரமூட்டும் தலைப்புச் செய்திகளால் தாக்குவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய ஊடகங்கள், அந்த அணியின் 12-வது வீரர் என்று பலரும் அடிக்கடி கூறுவதுண்டு. அவர்கள் யாரையும் விட்டுவைத்தில்லை.

இவ்வாறு நடைபெறுவது முதல்முறையும் கிடையாது. மேலும் கடந்த காலங்களில், விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட இந்திய வீரர்களும் இவர்களுக்கு இரையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Australian tabloid calls Joe Root Average Joe: Ashes banter or disrespect?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு காது கேளாமை பாதிப்பு!

தமிழகத்தில் 81.37% வாக்காளர்களுக்கு SIR படிவங்கள் வழங்கப்பட்டது |செய்திகள்: சில வரிகளில்| 13.11.25

தில்லி கார் வெடிப்பு சம்பவத்தில் யாரும் நினைத்துப் பார்க்காத தண்டனை! - உள்துறை அமைச்சர் அமித் ஷா

ஜார்க்கண்ட்: 25 ஆண்டுகளில் 10,769 மாவோயிஸ்டுகள் கைது; 555 வீரர்கள் பலி!

மே.இ.தீவுகள் ஆல்ரவுண்டரை மும்பை இந்தியன்ஸுக்கு விற்ற குஜராத் டைட்டன்ஸ்!

SCROLL FOR NEXT