கொல்கத்தா டெஸ்ட்டில் இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி 10 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய தெ.ஆ. அணி தற்போது 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
கொல்கத்தாவில் டாஸ் வென்ற தெ.ஆ. அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் குவித்து, அதிடியாக விளையாடியது. பின்னர், படிப்படியாக விக்கெட் இழக்கத் தொடங்கியது.
தற்போது, தேநீர் இடைவேளை வரை 52 ஓவர்களில் 154/8 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக மார்க்ரம் 31 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில், 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் பும்ரா 5, சிராஜ், குல்தீப் தலா 2, அக்ஷர் 1 என சிறப்பாக பந்துவீசி அசத்தினார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.