முன்னாள் சிஎஸ்கே வீரர் ஆர். அஸ்வினை மும்பை இந்தியன்ஸ் அணி சமூக வலைதளத்தில் கிண்டல் செய்துள்ளது.
ஐபிஎல் டிரேடிங் குறித்து முன்கூட்டியே கணிக்கும் அஸ்வினை கிண்டல் செய்யும் மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.
ஐபிஎல் மினி ஏலம் துபையில் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை டிரேடிங் (பணத்தை கொடுத்து வர்த்தகம்) செய்து வருகிறது.
ஒரு சில அணிகள் வீரர்களை மாற்றிக்கொள்கிறது. லக்னௌ அணியிலிருந்து ஷர்துல் தாக்குரை மும்பை இந்தியன்ஸ் வாங்குமென அஸ்வின் கூறியிருந்தார்.
அதேபோல் நடந்ததும் மும்பை அணி அஸ்வின் விடியோவை பதிவிட்டு, “நேற்று மதியமே அஸ்வின் உறுதிபடுத்திவிட்டார்” எனக் கூறியிருந்தது.
இதனைப் பகிர்ந்த அஸ்வின், “டிரேடிங் என்பது வதந்திகளால் ஆனது. அதனால், டிரேடிங் விடியோக்களை பதிவிடும்போது கவனம் தேவை” என சிரித்துக்கொண்டே கூறியுள்ளார்.
இந்தப் பதிவுக்குக் கீழே மும்பை இந்தியன்ஸ் அணி பிரபலமான ஒரு தெலுங்கு விடியோவை பதிவிட்டுள்ளது. அதில், ஒரு நபர் குழந்தைகளை கடுத்துவதுபோல ஏமாற்றுவர். பயத்தில் குழந்தைகள் கதறி அழும்.
அந்த நபர்தான் அஸ்வின் எனவும் குழந்தைகளை ஐபிஎல் அணிகளின் அட்மின்ஸ் எனவும் கிண்டலாக பதிவிட்டுள்ளது.
இந்த மீம்ஸ் பதிவு சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. நாளையுடன் (நவ.15) இந்த டிரேடிங் முடிவடையும் என்பதும் கவனிக்கத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.