அடுத்த ஐபிஎல் சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ள மற்றும் விடுவிக்கப்பட்டுள்ள வீரர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனுக்காக அணிகள் அனைத்தும் தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்தும், விடுவிக்க விரும்பும் வீரர்களை விடுவித்தும் வருகின்றன. அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைக்க இன்றே கடைசி நாள். அணிகள் தங்களுக்குள் டிரேடிங் மூலமும் வீரர்களை மாற்றிக் கொள்கின்றனர்.
இந்த நிலையில், அடுத்த ஐபிஎல் சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ள மற்றும் விடுவிக்கப்பட்டுள்ள வீரர்களின் விவரத்தை சிஎஸ்கே அணி நிர்வாகம் இன்று (நவம்பர் 15) வெளியிட்டுள்ளது.
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), எம்.எஸ்.தோனி, ஆயுஷ் மாத்ரே, டெவால்ட் பிரேவிஸ், உர்வில் படேல், சஞ்சு சாம்சன் (டிரேடிங்), ஷிவம் துபே, ஜேமி ஓவர்டான், ராமகிருஷ்ணா கோஷ், நூர் அகமது, கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங், நாதன் எல்லிஸ், ஸ்ரேயாஸ் கோபால், முகேஷ் சௌதரி.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்
ரவீந்திர ஜடேஜா (டிரேடிங்), ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே, மதீஷா பதிரானா, சாம் கரண் (டிரேடிங்), ஆண்ட்ரே சித்தார்த், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஷேக் ரஷீத், விஜய் சங்கர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.