சிஎஸ்கேவில் இருந்து நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா விடைபெற்று, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்துள்ளார்.
சிஎஸ்கே நிர்வாகம் தனது சமூக வலைதள பக்கத்தில் விடியோ வெளியிட்டு சிறப்பு செய்துள்ளது.
2011 முதல் சிஎஸ்கே அணியில் இருக்கும் ஜடேஜா 200 போட்டிகளில் விளையாடி 2,354 ரன்கள்,152 விக்கெட்டுகள், 94 கேட்ச்சுகள் என அசத்தியுள்ளார்.
மினி ஏலத்துக்கு முன்பாக சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக ஜடேஜா ராஜஸ்தானுக்கு ரூ.14 கோடிக்கு விற்கப்பட்டுள்ளார். இவருடன் சிஎஸ்கேவின் சாம் கரணும் விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ஜடேஜா. ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருக்கிறார்கள். இது குறித்து சிஎஸ்கே பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
மஞ்சள் நிறத்தில் தைரியத்தினை வரலாறு பேசும்போது, உனது பெயரை எதிரொலிக்கும். நன்றி, ரவீந்திர ஜடேஜா எனக் கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.