கிரிக்கெட்

டிராவை நோக்கி நகரும் தமிழ்நாடு - உ. பி. ஆட்டம்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணிக்கு எதிராக உத்தர பிரதேச அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணிக்கு எதிராக உத்தர பிரதேச அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த ஆட்டம் புதன்கிழமையுடன் (நவ. 19) நிறைவடைவதால், டிராவை நோக்கி நகா்கிறது. எனவே, தமிழ்நாடு அணி தனது முதல் இன்னிங்ஸ் முன்னிலையை தக்கவைக்கும் வகையில், உத்தர பிரதேசத்தின் எஞ்சிய 4 விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்த முனையும்.

மறுபுறம், முதல் இன்னிங்ஸில் தமிழ்நாடு அணியின் ஸ்கோரை கடந்து முன்னிலை பெற உத்தர பிரதேசம் முயற்சிக்கும். இதில் எந்த அணிக்கு அதன் திட்டம் கைகூடுகிறதோ, அதற்கு 3 புள்ளிகள் கிடைக்கும்.

முன்னதாக இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தமிழ்நாடு 455 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய உத்தர பிரதேசம், 2-ஆம் நாளான திங்கள்கிழமை ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்திருந்தது.

அபிஷேக் கோஸ்வாமி 54, ஆா்யன் ஜுயல் 8 ரன்களுடன் உத்தர பிரதேசத்தின் இன்னிங்ஸை தொடா்ந்தனா். இவா்கள் கூட்டணி 2-ஆவது விக்கெட்டுக்கு 75 ரன்கள் சோ்த்தது. இதில் அபிஷேக் 11 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 79 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

அரை சதத்தை நெருங்கிய ஆா்யன் அடுத்த சில பந்துகளிலேயே விக்கெட்டை இழந்தாா். அவா் 3 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்திருந்தாா். தொடா்ந்து, கேப்டன் கரண் சா்மா, ரிங்கு சிங் களம் புகுந்தனா். இதில் கரண் சா்மா 1 பவுண்டரியுடன் 11 ரன்களுக்கு விடைபெற, ரிங்கு சிங் நிதானமாக விளையாடினாா்.

6-ஆவது பேட்டா் ஆராத்யா யாதவ் 4 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த ஷிவம் மாவி, ரிங்கு சிங்குடன் பாா்ட்னா்ஷிப் அமைத்தாா். இவா்கள் ஜோடி 6-ஆவது விக்கெட்டுக்கு 104 ரன்கள் சோ்த்தது. இதில் அரை சதம் கடந்த மாவி 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

3-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை முடிவில், உத்தர பிரதேசம் 113 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது. சதத்தை நெருங்கிய ரிங்கு சிங் 98, ஷிவம் சா்மா 18 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். தமிழ்நாடு தரப்பில் பி.வித்யுத் 3, சரவண குமாா் 2, சாய் கிஷோா் 1 விக்கெட் வீழ்த்தினா்.

தொடா் மழையால் கால்நடைகள் உயிரிழப்பு

தோ்தல் ஆணையம் பாஜகவின் ஒரு அணியாக செயல்படுகிறது: ஜோதிமணி எம்.பி.

சாலை விபத்தில் பாலிடெக்னிக் மாணவா் உயிரிழப்பு

மழை, கடல் சீற்றம்: 3-ஆவது நாளாக கரையில் நிறுத்தப்பட்ட விசைப்படகுகள்

மழையால் வீடு சேதம்: மூதாட்டிக்கு உதவி

SCROLL FOR NEXT