டிராவிஸ் ஹெட், ரவி சாஸ்திரி.  படங்கள்: ஏபி, ரவி சாஸ்திரி.
கிரிக்கெட்

இப்படித்தான் எங்கள் நாட்டை 2 ஆண்டுகளுக்கு முன்பு அமைதியாக்கினாய்... டிராவிஸ் ஹெட்டை புகழ்ந்த ரவி சாஸ்திரி!

ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் பற்றி ரவி சாஸ்திரி கூறியதாவது...

இணையதளச் செய்திப் பிரிவு

ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் குறித்து ரவி சாஸ்திரி மிகவும் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக எங்கள் நாட்டை அமைதியாக்கினாய் என்று தொடங்கிய ரவி சாஸ்திரியை இன்னமும் உலகக் கோப்பை போட்டியை மறக்கவில்லையா என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.

ஆஷஸ் டெஸ்ட் தொடர் வரலாற்றில் இரண்டாவது அதிவேக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை டிராவிஸ் ஹெட் படைத்தார்.

முதல் இன்னிங்ஸில் இரண்டு அணிகளும் சொதப்பிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில், ஆஸிக்கு 205 ரன்கள் தேவையான நிலையில், ஒரே நாளில் அதனை சேஸ் செய்ய ஹெட் காரணமாக இருந்தார்.

8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸி. அபார வெற்றி பெற்றது. அரைசதம் அடிக்கவே இங்கிலாந்து பேட்டர்கள் சிரம்மப்பட்டு வந்த நிலையில், டிராவிஸ் ஹெட் எளிதாக சதமடித்து போட்டியை முடித்துவிட்டார்.

இப்படி பலமுறை இந்தியாவுக்கு எதிராக ஆட்டத்தை மாற்றி இந்திய ரசிகர்களின் சாபத்தை வாங்கிக்கட்டியுள்ளார்.

இந்நிலையில், முன்னாள் இந்திய வீரரும் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:

டிராவிஸ் ஹெட்... இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் நாட்டை அமைதிக்குள் மூழ்கடித்தாய். இன்று, மீண்டும் அதனை செய்து முடித்துள்ளாய்.

அதுவும் மிகச்சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டில் அதனை மிகவும் தீவிரமான பேஷனில் செய்துள்ளாய். இது மிகவும் சிறந்த இன்னிங்ஸ். தலைவணங்குகிறேன். இங்கிலாந்துடன் என்பது கூடுதல் சிறப்பானது என்றார்.

இந்திய ரசிகர்கள் எங்களைப் போலவே ரவி பாய் நீங்களும் அந்த 2023 உலகக் கோப்பையை மறக்கவில்லையா என நெகிழ்ச்சியாகக் கிண்டல் செய்து வருகிறார்கள்.

Ravi Shastri has posted a very emotional post about Australian player Travis Head.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நான், நான், நான்... சம்ரீன் கௌர்!

“கன்னி ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

ரஜினி - 173 இயக்குநர் இவரா?

தென் மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை! இன்றும் நாளையும் எங்கெங்கு கனமழை பெய்யும்?

38 நிமிஷங்களில் வெற்றி..! ஆஸி. ஓபனில் தங்கம் வென்ற லக்‌ஷயா சென்!

SCROLL FOR NEXT