மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் வருகிற ஜனவரி 9-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் வழக்கமாக பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடைபெறும். ஆனால், ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பைத் தொடர் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதால், மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இந்த முறை முன்கூட்டியே நடத்தப்படுகிறது.
மகளிர் பிரிமீயர் லீக் 3 சீசன்களைக் கடந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் நான்காவது சீசன் ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டிகள் நவி மும்பை மற்றும் வதோதராவில் நடத்தப்படவுள்ளன.
இது தொடர்பாக மகளிர் பிரீமியர் லீக் தலைவர் ஜெயேஷ் ஜியார்ஜ் பேசியதாவது: மகளிர் பிரீமியர் லீக் தொடரின் அடுத்த சீசன் நவி மும்பை மற்றும் வதோதராவில் நடத்தப்படும். தொடரின் பாதிப் போட்டிகள் டி.ஒய்.பாட்டீல் திடலில் நடத்தப்படும். அதன் பின், மீதமுள்ள போட்டிகள் வதோதராவில் நடத்தப்படும். இறுதிப்போட்டியும் வதோதராவில் நடைபெறும் என்றார்.
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் நடப்பு சாம்பியனாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.