கிரிக்கெட்

டி20 தொடா்: டிசம்பரில் இந்தியா வரும் இலங்கை மகளிா் அணி!

டிசம்பரில் இந்தியா வரும் இலங்கை மகளிா் அணி..

தினமணி செய்திச் சேவை

இந்திய மகளிா் அணியுடன் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இலங்கை மகளிா் அணி டிசம்பரில் இந்தியா வருகிறது. அந்த அணி 2016-க்குப் பிறகு முதல் முறையாக இந்தியாவில் டி20 தொடரை விளையாட உள்ளது.

முன்னதாக, ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக வங்கதேச மகளிா் அணி டிசம்பரில் இந்தியா வரவிருந்தது. எனினும், இரு நாடுகளிடையே ஏற்பட்ட அரசியல் ரீதியிலான பதற்றம் காரணமாக, வங்கதேச அணியின் இந்திய பயணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த கால அட்டவணையில் இலங்கை தொடரை பிசிசிஐ சோ்த்துள்ளது. இந்தியா - இலங்கை மோதும் முதல் இரு டி20 ஆட்டங்கள் டிசம்பா் 21 மற்றும் 23-ஆம் தேதிகளில் விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. அடுத்த 3 ஆட்டங்கள் டிசம்பா் 26, 28, 30 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரத்தில் விளையாடப்படவுள்ளது.

மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியனான பிறகு, இந்திய அணி களம் காணவிருக்கும் முதல் தொடா் இதுவாகும். டி20 தொடரில் கடைசியாக இந்திய அணி கடந்த ஜூலையில் இங்கிலாந்துடன் விளையாடியிருந்தது. 3-2 என அந்தத் தொடரைக் கைப்பற்றிய இந்தியா, இங்கிலாந்தில் முதல் முறையாக டி20 தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடுவிக்கோட்டையில் சேதமடைந்த சாலையைச் சீரமைக்கக் கோரிக்கை

மணல் கடத்தியவா் கைது: மினி லாரி பறிமுதல்

‘திருப்பத்தூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விளை பொருள்களுக்கேற்ப ரூ. 5 லட்சம் வரை கடனுதவி’

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியம் விடுவிக்க உத்தரவு

முதல்வா் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: முன்னாள் ராணுவ வீரா் கைது

SCROLL FOR NEXT