முகப்பு
கிரிக்கெட்

2-வது டி20: வங்கதேசத்துக்கு 171 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அயர்லாந்து!

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய அயர்லாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 29 நவம்பர், 2025 at 2:21 PM
- படம் | அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
பகிர்:

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய அயர்லாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்துள்ளது.

வங்கதேசம் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி சட்டோகிராமில் இன்று (நவம்பர் 29) நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் அதிகபட்சமாக லோர்கான் டக்கர் 41 ரன்களும், டிம் டெக்டார் 38 ரன்களும் எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து, கேப்டன் பால் ஸ்டிரிலிங் 29 ரன்கள் எடுத்தார்.

வங்கதேசம் தரப்பில் மஹேதி ஹாசன் 3 விக்கெட்டுகளையும், தன்சிம் ஹாசன் சாகிப் மற்றும் சாய்ஃபுதீன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேச அணி விளையாடி வருகிறது.

summary

Playing first in the second T20 against Bangladesh, Ireland scored 170 runs for the loss of 6 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.