முகப்பு
கிரிக்கெட்

அயர்லாந்து 235 ரன்கள் குவிப்பு..! டி20 உலகக் கோப்பையில் புதிய வரலாறு!

டி20 உலகக் கோப்பை 2026-ல் வரலாறு படைத்த அயர்லாந்து அணி குறித்து...

Updated On : 14 பிப்ரவரி 2026, 12:57 pm IST
அயர்லாந்து அணியின் வீரர்கள். - படம்: ஏபி
பகிர்:

டி20 உலகக் கோப்பை 2026-ல் அதிக ரன்களை குவித்து அயர்லாந்து அணி புதிய வரலாறு படைத்துள்ளது.

ஓமனுக்கு எதிரான உலகக் கோப்பைப் போட்டியில் 20 ஓவர்களில் அயர்லாந்து அணி 235/5 ரன்கள் எடுத்துள்ளது.

கொழும்பில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணியின் கேப்டன் ஜதீங்கர் சிங் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

Advertisement

Advertisement

முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணியின் கேப்டன் லார்கன் டக்கெர் 51 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கரேத் டெலானி 30 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழக்க, கடைசியில் வந்த ஜார்ஜ் டாக்ரெல் 9 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

குறிப்பாக, கடைசி ஓவரின் மூன்று பந்துகளிலும் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து ஜார்ஜ் டாக்ரெல் அசத்தினார்.

டி20 உலகக் கோப்பை 2026-ல் அதிக ரன்களை (235) குவித்த அணியாக அயர்லாந்து அணி புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பாக இலங்கை இந்தத் தொடரில் 225 ரன்கள் எடுத்திருந்தது.

ஒட்டுமொத்த உலகக் கோப்பையின் வரலாற்றில் இது இரண்டாவது அதிகபட்ச இலக்கு என்பதும் குறிப்பிடத்தக்கது.

டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள்

1. இலங்கை - 260/6 ரன்கள் (கென்யாவுக்கு எதிராக, 2007)

2. அயர்லாந்து - 235/5 (ஓமனுக்கு எதிராக, 2026)

3. இங்கிலாந்து - 230/8 (தெ.ஆ. எதிராக, 2016)

4. தென்னாப்பிரிக்கா - 229/4 (இங்கிலாந்துக்கு எதிராக, 2016)

5. இலங்கை - 225 (ஓமனுக்கு எதிராக, 2026)

6. இந்தியா - 218/5 (இங்கிலாந்துக்கு எதிராக, 2007)

summary

Ireland have created new history by scoring the most runs in the T20 World Cup 2026.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.