கே.எல்.ராகுல் படம் | AP
கிரிக்கெட்

சுழற்பந்துவீச்சில் இந்திய அணி தடுமாறுவதற்கு என்னிடம் பதில் இல்லை: கே.எல்.ராகுல்

இந்திய அணி சுழற்பந்துவீச்சில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு தன்னிடம் உறுதியான பதில் இல்லை என கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

இந்திய அணி சுழற்பந்துவீச்சில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு தன்னிடம் உறுதியான பதில் இல்லை என கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்த நிலையில், ஒருநாள் தொடர் நாளை (நவம்பர் 30) முதல் தொடங்கவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை ராஞ்சியில் நடைபெறுகிறது. 

இந்த நிலையில், இந்திய அணி சுழற்பந்துவீச்சில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்துவது தொடர்பாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள கே.எல்.ராகுல் பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த இரண்டு சீசன்களாக நாங்கள் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக நன்றாக விளையாடவில்லை. இந்திய அணி சுழற்பந்துவீச்சில் முன்பு எப்படி மிகவும் சிறப்பாக செயல்பட்டது, தற்போது ஏன் சுழற்பந்துவீச்சில் தடுமாறுகிறது என்பது உண்மையாக எனக்குத் தெரியவில்லை. இதற்கு என்னிடம் உறுதியான பதில் எதுவும் இல்லை. அணியாகவும், தனிப்பட்ட விதத்திலும் வீரர்கள் சிறப்பாக விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

சுழற்பந்துவீச்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது ஒரே நாளில் வந்துவிடாது. எங்களது ஆட்டத்தில் சிறிது, சிறிதாக முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்வோம். இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான தொடர்களுக்கு முன்பாக நாங்கள் நன்றாக தயாராகி விடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. சுழற்பந்துவீச்சில் நன்றாக செயல்பட்ட மூத்த வீரர்களிடம் அறிவுரை கேட்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்றார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி அதன் சொந்த மண்ணில் அண்மையில் முழுமையாக இழந்தது குறிப்பிடத்தக்கது.

KL Rahul has said that he does not have a definitive answer to the Indian team's inconsistent spin bowling performance.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவனம் ஈர்த்த பிற மொழிப் படங்கள் - 2025

கூட்டணி குறித்து விஜய் சொன்ன உண்மைக் கதை!

தமிழகத்தைச் சேர்ந்த 5 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு!

திரைக் கதிர்

”தயவுசெஞ்சு ஒற்றுமையா இருங்க..!” தொண்டர்களுக்கு Vijay அறிவுரை! | TVK

SCROLL FOR NEXT