பென் ஸ்டோக்ஸ் படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

பெர்த் டெஸ்ட் தோல்வியிலிருந்து வலுவாக மீண்டு வருவோம்: பென் ஸ்டோக்ஸ்

பெர்த் டெஸ்ட்டில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து வலுவாக மீண்டு வருவோம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

பெர்த் டெஸ்ட்டில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து வலுவாக மீண்டு வருவோம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில், பெர்த் டெஸ்ட்டில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து வலுவாக மீண்டு வருவோம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு இங்கிலாந்தில் உள்ள ரசிகர்கள் ஏமாற்றமடைந்திருப்பார்கள் எனத் தெரியும். ஆனால், இது 5 போட்டிகள் கொண்ட தொடர். இன்னும் 4 போட்டிகள் மீதமிருக்கின்றன. முதல் போட்டியில் மட்டுமே நாங்கள் தோல்வியடைந்துள்ளோம். ஆஷஸ் டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பே, இந்த தொடரில் வெற்றி பெற்றுதான் தாயகம் திரும்புவோம் என்பதை இலக்காக எடுத்துக் கொண்டோம். ஆஷஸ் தொடரை வெல்லும் இலக்கில் மிகவும் உறுதியாக இருக்கிறோம்.

முதல் டெஸ்ட்டில் நன்றாக செயல்பட்டோம். முதல் இன்னிங்ஸில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினோம். மேலும், முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டினை மட்டுமே இழந்து 100 ரன்கள் எடுத்திருந்தோம். சில இடங்களில் சிறப்பாக செயல்பட்டிருந்தால், போட்டியின் முடிவு இங்கிலாந்து அணிக்கு சாதகமாக அமைந்திருக்கும். ஒரு அணியாகவும், தனிப்பட்ட முறையிலும் வீரர்கள் முதல் டெஸ்ட்டில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். இங்கிலாந்து அணி அதன் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். இரண்டாவது டெஸ்ட்டில் வலுவாக மீண்டு வருவோம் என்றார்.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

England captain Ben Stokes has said that they will bounce back strongly from the defeat in the Perth Test.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூா் அருகே போலீஸாா் சுட்டதில் ரௌடி பலி: கைதியைக் கொல்ல முயன்ற வழக்கில் கைதானவா்

காவல் உதவி ஆய்வாளா் தூக்கிட்டுத் தற்கொலை

உக்ரைன் போா் முனையில் சிக்கித் தவித்த தமிழக மாணவா் மீட்பு!

திருடியதால் தாக்கப்பட்டவா் உயிரிழப்பு: வாா்டு உறுப்பினா் உள்பட 2 போ் கைது

சமூக வலைதளப் பதிவுகள்: உயா்நீதிமன்றம் வேதனை

SCROLL FOR NEXT