நீல் ஹார்வி. 
கிரிக்கெட்

97-வது பிறந்த நாளை கொண்டாடிய உலகின் வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரர்!

97-வது பிறந்த நாளை கொண்டாடிய உலகின் வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரரைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

ழம்பெரும் டெஸ்ட் கிரிக்கெட்டரான நீல் ஹார்வி இன்று தன்னுடைய 97-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இதன்மூலம், உலகின் வயதான வாழும் டெஸ்ட் கிரிக்கெட்டர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நீல் ஹார்வி, அப்போதைய கேப்டனான டான் பிராட் மேனின் இன்விஸிபிள்ஸ் அணியில் இருந்த உயிருடன் இருக்கும் ஒரே வீரர் இவர்தான். இந்த இன்விஸிபிள்ஸ் அணி 1948 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் 34 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றிருந்தது.

1949-50 ஆம் ஆண்டுகளில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 5 போட்டிகளில் 4 சதங்கள் விளாசிய நீர் ஹார்வி, 660 ரன்கள் குவித்திருந்தார். அதேபோல, 1952-53 ஆம் ஆண்டுகளில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 9 இன்னிங்ஸ்களில் 834 ரன்கள் குவித்திருந்தார்.

விக்டோரியாவில் பிறந்த இடதுகை ஆட்டக்காரரான நீல் ஹார், 1948 ஆம் ஆண்டு முதல் 1963 வரை 79 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 48.41 என்ற சராசரியுடன் 6,149 ரன்கள் எடுத்துள்ளார். 306 முதல் தரப் போட்டிகளில் 21,000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.

அவர் தனக்கு 19 வயது (19 ஆண்டுகள் 121 நாள்கள்) இருக்கும் போதே 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 சதங்கள் விளாசியிருந்தார். 1948 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிராக மெல்பர்னில் நடைபெற்ற போட்டியில் 153 ரன்கள் விளாசியிருந்தார்.

1963 ஆம் ஆண்டு ஓய்வுக்குப் பின்னர், 12 ஆண்டுகள் ஆஸ்திரேலிய அணியின் தேர்வராகவும் பணியாற்றினார். அவருக்கு 2000 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஹால் ஆஃப் ஃபேம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

முன்னதாக, நீல் ஹார்வியில் சக வீரரான பில்லி பிரௌன் 2008 ஆம் ஆண்டு தன்னுடைய 95 ஆண்டுகள் 229 நாள்களில் மரணமடைந்தார். இவர் 1934 - 1948 ஆண்டுகளில் 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

தற்போது உயிருடன் இருக்கும் உலகின் வயதான கிரிக்கெட் வீரர்கள்

  • 97 ஆண்டுகள் 000 நாள்கள் – நீல் ஹார்வி.

  • 95 ஆண்டுகள் 334 நாள்கள் – ட்ரெவர் மெக்மஹோன்.

  • 95 ஆண்டுகள் 290 நாள்கள் – வசீர் முகமது.

  • 95 ஆண்டுகள் 221 நாள்கள் – சி.டி. கோபிநாத்.

  • 95 ஆண்டுகள் 123 நாள்கள் – இயன் லெகாட்.

Oldest living Test cricketer Neil Harvey turns 97

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ.88.80 ஆக நிறைவு!

பிங்க் பியூட்டி.... கெளரி கிஷன்!

முதல்முறை ஆஸ்திரேலியா சென்றார் அமைச்சர் ராஜ்நாத் சிங்!

கதாநாயகனாகும் இன்பநிதி! இயக்குநர் இவரா?

4 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: நிஃப்டி 25,100க்கு கீழே, சென்செக்ஸ் 81,773 புள்ளிகளாக நிறைவு!

SCROLL FOR NEXT