மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து மூன்று போட்டிகளிலும் தோல்வியுற்றுள்ளது.
இந்தத் தொடர் தோல்விகள் மூலம் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகின்றன.
இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி தனது முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியுற்றுள்ளது.
நேற்று ஆஸ்திரேலியாவுடன் பந்துவீச்சில் 76 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை எடுத்து சிறப்பாகவே தொடங்கியது.
இருப்பினும் கடைசியில் 221 ரன்களை விட்டுக்கொடுத்தது. சேஸ் செய்யும்போது 36.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் 7 லீக் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் டாப் 4 அணிகள் அரையிறுதிக்கு தேர்வாகும்.
மகளிர் உலகக் கோப்பைக்கான புள்ளிப் பட்டியல்
டாப் 4 அணிகள்
1. ஆஸ்திரேலியா - 3 போட்டிகள் - 5 (+1.960) புள்ளிகள்
2. இங்கிலாந்து - 2 போட்டிகள் - 4 (+1.757) புள்ளிகள்
3. இந்தியா - 2 போட்டிகள் - 4 (+1.515) புள்ளிகள்
4. வங்கதேசம் - 2 போட்டிகள் - 2 ( +0.573) புள்ளிகள்
கீழ்நிலையில் உள்ள 4 அணிகள்
5. தெ.ஆப்பிரிக்கா - 2 போட்டிகள் - 2 (-1.402) புள்ளிகள்
6. இலங்கை - 2 போட்டிகள் - 1 (-1.255) புள்ளி
7. நியூசிலாந்து - 2 போட்டிகள் - 0 (-1.485) புள்ளி
8. பாகிஸ்தான் - 2 போட்டிகள் - 0 (-1.887) புள்ளி
பாகிஸ்தான் அணி இனிமேல் வரும் 4 போட்டிகளில் வென்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.