ஆந்திரச் சிறுமிக்கு தங்கள் நாட்டு வழக்கத்தைக் கற்றுத் தந்த ஆஸி. கேப்டன். படங்கள்: இன்ஸ்டா / ஆஸி. வுமன் கிரிக்கெட்.
கிரிக்கெட்

ஆந்திரச் சிறுமிக்கு தங்கள் நாட்டு வழக்கத்தைக் கற்றுத்தந்த ஆஸி. கேப்டன்..! வைரல் விடியோ!

ஆஸ்திரேலிய மகளிரணி கேப்டனின் வைரல் விடியோ பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

ஆஸ்திரேலிய மகளிரணி கேப்டன் அலீஸா ஹீலி குழந்தைகளுடன் பேசிய விடியோ வைரலாகி வருகிறது.

அந்த விடியோவில் தங்கள் நாட்டு பழக்கத்தை குழந்தைக்குக் கற்றுக்கொடுக்கும் காட்சிகள் கவனம் ஈர்த்து வருகின்றன.

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகின்றன.

கடைசியாக இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதிய போட்டியில் 330 ரன்களை சேஸ் செய்து ஆஸி. வரலாறு படைத்தது.

இந்தப் போட்டியில் அலீஸா ஹீலி 140 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகி விருது வென்றார்.

அடுத்த போட்டியில் ஆஸி. அணி வங்கதேசத்துடன் அக்.16ஆம் தேதி மோதுகிறது.

விசாகப்பட்டினம் கிரிக்கெட் திடலில் இதற்கான பயிற்சியில் ஆஸி. அணியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திடலில் ஆந்திரச் சிறுமிக்கு தங்கள் நாட்டின் வரவேற்புச் சொற்சொடரான ”குட் டே மேட்” என்பதைக் கற்றுத்தருகிறார்.

காமிரா முன்பாக அந்தச் சிறுமியும் அதை அப்படியே கூற மகிழ்ச்சியில் குதிக்கிறார். இந்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

The Aussie captain Alyssa Healy who taught the Andhra girl about their country's customs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எம்.டி.எஸ், தொழிலாளா்களின் கோரிக்கைகளை நிவா்த்தி செய்யக் குழு அமைக்கப்படும்: மேயா் தகவல்

700 கிலோ பட்டாசுகள் பறிமுதல்- இருவா் கைது

தெற்காசியப் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை

பெண் தொழில் முனைவோருக்கு ரூ.10 கோடி வரை பிணையில்லா கடன்: முதல்வா் தொடங்கிவைப்பு

வரும் ஜனவரி 31 வரை தண்ணீா் கட்டணம் மீதான தாமதமாக கட்டணம் முழு தள்ளுபடி: முதல்வா் குப்தா அறிவிப்பு

SCROLL FOR NEXT