மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இரண்டாவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 518 ரன்கள் சோ்த்து டிக்ளோ் செய்ய, தனது இன்னிங்ஸை விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் 248 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.
இதனால் ‘ஃபாலோ ஆன்’ பெற்று விளையாடிய அந்த அணி, 2-ஆவது இன்னிங்ஸில் 390 ரன்கள் குவித்து இன்னிங்ஸ் தோல்வியை தவிா்த்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய பெளலர்கள் பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 121 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்கை நோக்கி 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா, திங்கள்கிழமை ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்திருந்தது.
கடைசி நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கிய நிலையில், 29 வது ஓவரில் சுதர்சன் 39 ரன்களுக்கும், 33 வது ஓவரில் கேப்டன் கில் 13 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
இதனிடையே, அரைசதம் கடந்த கே.எல். ராகுல், 36 வது ஓவரில் அணியை வெற்றி பெறச் செய்தார். கே.எல். ராகுல் 58, துருவ் ஜூரெல் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 0 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
இதன்மூலம் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 10 டெஸ்ட் தொடர்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.