மூன்று ஒருநாள், ஐந்து டி20 போட்டிகள் விளையாட இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்கிறது.
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்திற்கு இந்திய அணி சென்றடைந்ததை பிசிசிஐ விடியோ வெளியிட்டு உறுதிசெய்துள்ளது.
பெர்தில் அக்.19ஆம் தேதி தொடங்கும் ஒருநாள் போட்டியில் விளையாட ரோஹித் சர்மா, விராட் கோலி, புதிய கேப்டன் ஷுப்மன் கில் ஆகியோர் கொண்ட இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றடைந்தது.
கோலி, ரோஹித், கில் தவிர்த்து மற்ற வீரர்களான கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால், அர்ஷ்தீப், ஹர்ஷித் ராணா, நிதீஷ்குமார் உடன் சில உதவியாளர்களும் இவர்களுடன் வந்திறங்கினார்கள்.
தலைமைப் பயிற்சியாளர் கம்பீர் உள்பட மற்ற உதவியாளர்கள் புதன்கிழமை மாலை தில்லியில் இருந்து புறப்பட்டு அணியில் தாமதமாக இணைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், பிசிசிஐ வெளியிட்ட விடியோவில் அவர் இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது.
முதல் ஒருநாள் போட்டி: பெர்த், அக்.19
2ஆவது ஒருநாள் போட்டி: அடிலெய்ட், அக்.23
3-ஆவது ஒருநாள் போட்டி: சிட்னி , அக்.25
அடுத்ததாக 5 டி20 போட்டிகள் அக்.29 முதல் தொடங்குகிறது.
சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு விராட் கோலி, ரோஹித் சர்மா மீண்டும் இந்திய அணியில் இணைகிறார்கள்.
இந்திய வீரர்கள் ஆஸி. சென்றடைந்த விடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
அந்த விடியோவில் விராட் கோலி, ரோஹித் சர்மாவை புதிய கேப்டன் ஷுப்மன் கில் கட்டியணைக்கும் காட்சிகளும் இந்திய வீரர்களுக்கு அங்கு கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளிக்கும் காட்சிகளும் கவனம் பெற்று வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.