பாகிஸ்தான் தாக்குதலில் பலியானவர்களுக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் நாடுகளின் எல்லைகளில் இரு நாடுகளுக்கு இடையேயான தாக்குதலில் பாகிஸ்தானின் 100-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பலியாகினார். அதன்பின்னர், போர்ப் பதற்றத்துக்கு மத்தியில், 48 மணிநேர போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், போர் நிறுத்தத்தை மீறிய பாகிஸ்தான் ராணுவம், ஆப்கானிஸ்தானின் பாக்டிக்கா மாகாணம் உர்குன் பகுதியில் வான்வெளித் தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான் நடத்திய கொடூரத் தாக்குதலில் உர்குனில் இருந்து சரானாவுக்கு கிழக்கு பாக்டிக்கா மாகாணம் வழியாக நட்புறவு கிரிக்கெட் போட்டியில் விளையாடச் சென்ற வீரர் கபீர், சிப்கதுல்லா, ஹாரூன் உள்பட 17 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.
பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட மூன்று அணிகளும் டி20 முத்தரப்பு தொடரில் விளையாடவிருந்தன. இந்தத் தொடர் நவம்பர் 17 ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி வரை லாகூரில் நடைபெறவிருந்தது.
பாகிஸ்தான் தாக்குதலில் கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் பலியான விவகாரத்தில், கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தான் அணி, முத்தரப்பு தொடரில் இருந்தும் விலகியுள்ளது.
தொடருக்கு முன்னதாக, ஜிம்பாப்வேயின் ஹராரே கிரிக்கெட் திடலில் ஆப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகள் ஒரேயொரு டெஸ்ட் தொடரில் வருகிற 20 ஆம் தேதி விளையாடுகின்றன.
அங்கு பயிற்சியில் உள்ள ஆப்கானிஸ்தான் வீரர்கள் பலியான கிரிக்கெட் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.