நியூசிலாந்து - இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
இவ்விரு அணிகளும் மோதும் முதலாவது டி20 போட்டி கிறைஸ்ட்சார்ச்சில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாச் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சாண்ட்னர் முதலில் பந்துவீச்சைத் தெர்ந்தெடுத்தார்.
அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணித் தரப்பில் பிலிப் சால்ட் 3 ரன்களில் வெளியேற விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் 29 ரன்களிலும், ஜேக்கப் பெத்தேல் 15 ரன்களிலும் வெளியேறினர்.
கேப்டன் ஹாரி புரூக் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 20 ரன்கள் எடுத்த நிலையில், 20 ரன்கள் எடுத்தார். டாம் பாண்டன் 9 ரன்கள், ஜோர்டன் காக்ஸ் 16 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர். 16.4 ஓவர்களில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்து பரிதவிப்புக்குள்ளானது.
பின்னர், கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய ஆல்ரவுண்டர் சாம் கரன் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 49 ரன்கள் எடுத்து அணியை 150 ரன்களைக் கடக்க வைத்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி, ஜேக்கப், கைல் ஜேமிசன், மிட்செல் சாண்டனர், ஜேம்ஸ் நசீம், மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
பின்னர், நியூசிலாந்து அணி தனது இன்னிங்ஸை துவங்குவதற்கு முன்னதாக மழை பெய்யத் துவங்கியது. மழை நிற்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டி வருகிற திங்கள்கிழமை இதே கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.