நியூசிலாந்து மகளிரணியின் கேப்டன் சோபியா டிவைன் மழையினால் ஆட்டம் கைவிடப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாகக் கூறியுள்ளார்.
இரண்டு முறையாக நியூசிலாந்து அணியின் போட்டிகள் மழையினால் கைவிடப்பதால் அந்த அணி அரையிறுதிக்குச் செல்வதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகின்றன.
பாகிஸ்தான் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெறுகின்றன. மழையினால் அந்த அணிக்கும் ஏமாற்றம் அடைந்துள்ளது.
நேற்று பாகிஸ்தான், நியூசி. போட்டி மழையினால் கைவிடப்பட்டது. இதனால், தெ.ஆ. அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
நியூசிலாந்தின் அரையிறுதிக் கனவுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது குறித்து அந்த அணியின் கேப்டன் பேசியதாவது:
உலகக் கோப்பைக்காக நான்கு ஆண்டுகள் காத்திருக்கிறோம். அதிலும் மழை குறுக்கிட்டு மிகப் பெரிய பங்கு வகிப்பது வருத்தமளிக்கிறது.
அடுத்த உலகக் கோப்பையிலாவது இந்தமாதிரி நாள்களுக்கு முன்பாக விளையாடுவார்கள் என நம்புகிறேன்.
பொதுவாக இங்கு மதிய நேரங்களில்தான் மழை வருகிறது. 10-11 மணிக்கு தொடங்கினால் விளையாட முடியும். அனைத்து அணிகளுமே கிரிக்கெட் விளையாடத்தான் விரும்புகிறார்கள்.
நீண்ட காலமாக காத்திருந்து, சிறந்த அணிக்கு எதிராக விளையாடும்போது மழையினால் தடைபடுவது மிகவும் அவமானகரமானது.
மழை இல்லாமல் இருந்தால் புள்ளிப் பட்டியலில் முன்னேறி இருப்போம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.