காயம் காரணமாக ஆஷஸ் தொடரின் முதல் போட்டியிலிருந்து பாட் கம்மின்ஸ் விலகியுள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் அடுத்த மாதம் 21 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் போட்டி நவம்பர் 21 ஆம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது. ஆஷஸ் தொடருக்காக இரண்டு அணிகளும் தங்களை தீவிரமாக தயார்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், காயம் காரணமாக ஆஷஸ் தொடரின் முதல் போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் விலகுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் போட்டியிலிருந்து கேப்டன் பாட் கம்மின்ஸ் விலகியுள்ளதால், அவருக்குப் பதிலாக ஸ்டீவ் ஸ்மித் அணியைக் கேப்டனாக வழிநடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து கேப்டன் பாட் கம்மின்ஸ் 6 முறை அணிக்காக விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த 6 முறையும் அணியை ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக வழிநடத்தியுள்ளார். தற்போது மீண்டும் ஒரு முறை அணியை கேப்டனாக வழிநடத்தவுள்ளார்.
பிரிஸ்பேனில் டிசம்பர் 4 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாட் கம்மின்ஸ் மீண்டும் அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.