படம் | AP
கிரிக்கெட்

முதல் ஒருநாள்: தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு; 131 ரன்களுக்கு சுருண்ட இங்கிலாந்து!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 131 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இணையதளச் செய்திப் பிரிவு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 131 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் இன்று (செப்டம்பர் 2) தொடங்கியது.

லீட்ஸில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து அணி முதலில் விளையாடியது.

இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேமி ஸ்மித் மற்றும் பென் டக்கெட் களமிறங்கினர். பென் டக்கெட் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஜேமி ஸ்மித் ஒருபுறம் சிறப்பாக விளையாட மறுமுனையில் இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து திணறியது.

ஜோ ரூட் (14 ரன்கள்), ஹாரி ப்ரூக் (12 ரன்கள்), ஜோஸ் பட்லர் (15 ரன்கள்), ஜேக்கோப் பெத்தேல் (1 ரன்), வில் ஜாக்ஸ் (7 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பாக விளையாடிய ஜேமி ஸ்மித் 48 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் அடங்கும்.

தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 24.3 ஓவர்களில் 131 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி ஆட்டமிழந்தது. தென்னாப்பிரிக்கா தரப்பில் கேசவ் மகாராஜ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். வியான் முல்டர் 3 விக்கெட்டுகளையும், நண்ட்ரே பர்கர் மற்றும் லுங்கி இங்கிடி தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி விளையாடி வருகிறது.

England were bowled out for 131 in the first ODI against South Africa.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாணவா்களின் எதிா்கால கல்வி வளா்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் திமுக!

காரைக்குடி மாநகராட்சி ஒப்பந்தப்புள்ளி விவகாரம்: இறுதி முடிவு எடுக்க இடைக்காலத் தடை

சேலம் ரயில்வே கோட்டத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு

பசும்பாலுக்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.45 ஆக உயா்த்த வேண்டும்!

பருவமழை: நெற்பயிா்களை பாதுகாக்க விவசாயிகளுக்கு அறிவுரை!

SCROLL FOR NEXT