சர்வதேச டி20 போட்டிகளில் வரலாறு படைத்த ரஷித் கான்!
சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் வரலாறு படைத்துள்ளார்.
சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் வரலாறு படைத்துள்ளார்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான முத்தரப்பு டி20 தொடர் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தியது.
Advertisement
Advertisement
வரலாறு படைத்த ரஷித் கான்
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
நேற்றையப் போட்டியில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை ரஷித் கான் படைத்தார். அவர் சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை 165 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
இதற்கு முன்னதாக, சர்வதேச டி20 போட்டிகளில் 164 விக்கெட்டுகளுடன் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் டிம் சௌதி முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Afghanistan's Rashid Khan has created history by taking the most wickets in T20 Internationals.
இதையும் படிக்க: உலகக் கோப்பைக்கான பேட்டிங் பயிற்சியாளரை நியமித்த நியூசிலாந்து!