பிரையன் பென்னட் படம் | ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

முதல் டி20: பிரையன் பென்னட் அரைசதம்; இலங்கைக்கு 176 ரன்கள் இலக்கு!

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்துள்ளது.

இலங்கை அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. ஒருநாள் தொடரை 2-0 என இலங்கை அணி முழுமையாக கைப்பற்றிவிட்ட நிலையில், இன்று (செப்டம்பர் 3) டி20 தொடர் தொடங்கியது.

ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் நடைபெற்று வரும் முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஜிம்பாப்வே முதலில் விளையாடியது.

முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் பிரையன் பென்னட் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 57 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 12 பவுண்டரிகள் அடங்கும்.

அவரைத் தொடர்ந்து, சிக்கந்தர் ராஸா 28 ரன்களும், ரியான் பர்ல் 17 ரன்களும் எடுத்தனர். சீன் வில்லியம்ஸ் 14 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் துஷ்மந்தா சமீரா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நுவான் துஷாரா, மஹீஷ் தீக்‌ஷனா மற்றும் துஷான் ஹேமந்தா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்குகிறது.

Zimbabwe, who batted first in the first T20I against Sri Lanka, scored 175 runs for the loss of 7 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆக்ஸ்போர்டில் பெரியார் படத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

இறகுப் பந்து போட்டி: பாலிடெக். மாணவா்கள் சிறப்பிடம்

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: மாநிலங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு - காங்கிரஸ் வலியுறுத்தல்

திருமலையில் 70,247 பக்தா்கள் தரிசனம்

வாக்காளா் பட்டியலில் சோனியா காந்தி பெயா் முறைகேடாக சோ்ப்பு: நடவடிக்கை கோரி நீதிமன்றத்தில் மனு

SCROLL FOR NEXT