பெங்களூரில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பலி குறித்து தினேஷ் கார்த்திக் விடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த விடியோவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக இருங்கள் எனக் கூறியுள்ளார்.
ஜுன் 4-இல் நடந்த சோகம்...
ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி முதல்முறையாக கடந்த 2025 சீசனில் கோப்பையை வென்றது. அதன் வெற்றிக் கொண்டாட்டத்தில் சின்னசாமி திடலுக்கு அருகில் 11 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.
சமீபத்தில் ஆர்சிபி அணி ஆர்சிபி கேர்ஸ் என்ற அமைப்பினை உருவாக்கி அதில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவியை அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஆர்சிபி அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராகவும் ஆலோசகராகவும் தினேஷ் கார்த்திக் இருக்கிறார். அவர் பேசிய விடியோவை ஆர்சிபி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அக்கறை காட்ட ஒன்று கூடுங்கள்
அதில் அவர் பேசியிருப்பதாவது:
கடந்த ஜூன் 4-இல் உயிரிழந்த குடும்பத்திற்கு எனது மனப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்கள் என்னவெல்லாம் கடந்து வந்திருப்பீர்கள் என்பதை என்னால் யோசிக்கக் கூட முடியவில்லை. இதிலிருந்து வெளிவர கடவுள் உங்களுக்கு பலத்தைத் தர வேண்டிக்கொள்கிறேன்.
இந்தக் கடினமான நேரத்தில், நமது ஆர்சிபி ரசிகர்கள் அனைவரும் நம்முடன் இணைந்து, அவர்களுக்குத் துணையாகவும் ஆறுதலாகவும் இருக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.