தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் படம் | AP
கிரிக்கெட்

27 ஆண்டுகளில் முதல் முறை... தொடரை முழுமையாக கைப்பற்றுமா தென்னாப்பிரிக்கா?

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்க அணி முழுமையாக கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்க அணி முழுமையாக கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் நடைபெற்று வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையே லார்ட்ஸில் நேற்று (செப்டம்பர் 4) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்க அணி கைப்பற்றியது.

தென்னாப்பிரிக்க அணி கடந்த 1998 ஆம் ஆண்டு கடைசியாக இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் தொடரை வென்றிருந்தது. அதன் பின், 27 ஆண்டுகளில் முதல் முறையாக இங்கிலாந்து மண்ணில் தற்போது ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இங்கிலாந்து வென்றிருந்தது. அதன் பின், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி இதுவரை வென்றதில்லை.

இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (செப்டம்பர் 7) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

There is anticipation among fans that the South African team will completely conquer the ODI series against England.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடலூர் சிப்காட் ஆலையில் ரசாயன கசிவு! 40 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓணம் அல்டிமேட்... ஐஸ்வர்யா தேவன்!

ஓணம் சேச்சி... சாதிகா!

ஓணம் பாரம்பரியம்... மௌனி ராய்!

கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்

SCROLL FOR NEXT