அர்ஷ்தீப் சிங் (கோப்புப் படம்) 
கிரிக்கெட்

ஐசிசி டி20 தரவரிசை வெளியீடு; இந்திய வீரர்கள் முன்னேற்றம்!

சர்வதேச டி20 போட்டிகளில் சிறந்த வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று (செப்டம்பர் 10) வெளியிட்டுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

சர்வதேச டி20 போட்டிகளில் சிறந்த வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று (செப்டம்பர் 10) வெளியிட்டுள்ளது.

ஐசிசி வெளியிட்டுள்ள இந்த தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோய் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 6-வது மற்றும் 10-வது இடங்களுக்கு முறையே முன்னேறியுள்ளனர்.

இந்த தரவரிசைப் பட்டியலில் வருண் சக்கரவர்த்தி 4-வது இடத்தில் உள்ளார். இந்திய அணியின் மற்றொரு சுழற்பந்துவீச்சாளரான அக்‌ஷர் படேல் ஒரு இடம் முன்னேறி 13-வது இடத்தில் உள்ளார்.

பேட்டிங்கை பொருத்தவரையில், அபிஷேக் சர்மா 829 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். திலக் வர்மா இரண்டாவது இடத்திலும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 6-வது இடத்திலும் உள்ளனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு இடம் சறுக்கி 11-வது இடத்தில் உள்ளார்.

ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் ஒரு இடம் முன்னேறி 26-வது மற்றும் 34-வது இடங்களில் முறையே உள்ளனர். ஆல்ரவுண்டர்களில் ஹார்திக் பாண்டியா முதலிடத்தில் தொடர்கிறார்.

The ICC today released the rankings for the best players in international T20 matches.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாத்தமங்கலம் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

வேளாண் தொழில்நுட்பக் கருத்தரங்கம்

மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சமுதாய வளப் பயிற்றுநா் பணி

குளத்தில் இறந்த மீன்கள்: போலீஸாா் விசாரணை

7,297 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்

SCROLL FOR NEXT