ஆரோன் ஹார்டி.  படம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா.
கிரிக்கெட்

காயம் காரணமாக ஆரோன் ஹார்டி விலகல்..! புதிய ஆல்-ரவுண்டர் சேர்ப்பு!

இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து விலகிய ஆஸி. வீரர் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா ’ஏ’க்கு எதிரான தொடரிலிருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலிய ’ஏ’ அணியின் ஆல்ரவுண்டர் ஆரோன் ஆர்டி விலகியுள்ளார்.

தோல்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆரோன் ஆர்டி விலகியுள்ளது ஆஸி. அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய ’ஏ’ அணி இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்து 2 நான்குநாள் கொண்ட டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது.

ஆரோன் ஆர்டிக்குப் பதிலாக வில் சதர்லேண்ட் ஆஸி. ஏ அணியில் இணைவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, இந்தத் தொடர்களில் இருந்து ஆஸி.யின் லேன்ஸ் மோரிஸ், காலியம் பிட்லெர் விலகியதும் கவனிக்கத்தக்கது.

ஆரோன் ஆர்டி ஷெஃபீல்ட் ஷீல்டு தொடரில் பங்கேற்க முனைப்பு காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தியா ஏ அணி (டெஸ்ட்): 

ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், நாராயண் ஜெகதீசன் (வி.கீ.), சாய் சுதர்சன், துருவ் ஜூரல் (துணை கேப்டன், வி.கீ.), தேவ்தத் பாடிக்கல், ஹர்ஷ் துபே, ஆயுஷ் பதோனி, நிதீஷ் குமார் ரெட்டி, தனுஷ் கோட்டியன், பிரசித் கிருஷ்ணா, மன்லீல் பி சுத் காதர், குர்னூர் தாக்குர்.

(இரண்டாவது போட்டி மட்டும்: கே.எல்.ராகுல், முகமது சிராஜ்)

ஆஸ்திரேலியா ஏ அணி (டெஸ்ட்):

சேவியர் பார்ட்லெட், கூப்பர் கோனொலி, ஜாக் எட்வர்ட்ஸ், ஆரோன் ஹார்டி, கேம்பல் கெல்லாவே, சாம் கான்ஸ்டாஸ், நாதன் மெக்ஸ்வீனி, டாட் மர்பி, பெர்கஸ் ஓ'நீல், ஆலிவர் பீக், ஜோஷ் பிலிப், கோரி ரோச்சிசியோலி, லியாம் ஸ்காட், ஹென்றி தோர்ன்டன்.

(இரண்டாவது போட்டி மட்டும்: வில் சதர்லேண்ட்)

முதல் டெஸ்ட்: செப்.16-19

இரண்டாவது டெஸ்ட்: செப்.23-26

ஆஸ்திரேலியா ஏ (ஒருநாள் அணி):

கூப்பர் கோனோலி, ஹாரி டிக்‌ஷன், ஜாக் எட்வர்ட்ஸ், சாம் எலியாட், ஜேக் பிரேசர் - மெக்கர்க், மெக்கன்சி ஹார்வி, டாட் மர்பி, தன்வீர் சங்கா, லியாம் ஸ்காட், லச்சி ஷாவ், டாம் ஸ்டிரைக்கர், வில் சதர்லேண்ட், ஹென்றி த்ரோண்டன்.

முதல் ஒருநாள்: செப்.30

இரண்டாவது ஒருநாள்: அக்.3

மூன்றாவது ஒருநாள்: அக்.5

Australia A have suffered another blow ahead of their multi-format tour of India with allrounder Aaron Hardie sidelined with a shoulder injury.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் இன்று செயற்கை மழைக்குத் திட்டம்! வானிலை மனம் வைத்தால்..

அடுத்த 3 மணிநேரம் சென்னை, 10 மாவட்டங்களில் மழை தொடரும்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவு! இன்றைய நிலவரம்!

விக்கிபீடியா-வுக்கு போட்டியாக க்ரோக்கிபீடியா அறிமுகம்!

பெண் விவசாயி குறித்து அவதூறு! நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்புக் கேட்ட கங்கனா!

SCROLL FOR NEXT