ஆசிய கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது.
துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இதையும் படிக்க: ஆசிய கோப்பை: பாக். திணறல்! இந்தியா வெற்றி பெற எளிய இலக்கு!
எளிய வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 16 ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 131 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், ஆட்டம் முடிந்ததும், பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்குவதைத் இந்திய வீரர்கள் தவிர்த்தனர்.
இந்திய வீரர்கள் பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து இதனைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: பாக். எதிராக இன்றிரவு கிரிக்கெட் ஆட்டம்: பல்வேறு தரப்பிலிருந்தும் வலுக்கும் கண்டனம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.