ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஓமனுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபு தாபியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் ஓமன் அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, இந்தியா முதலில் பேட் செய்கிறது.
இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜஸ்பிரித் பும்ரா மற்றும் வருண் சக்கரவர்த்தி பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை.
இதையும் படிக்க: ரோபோ சங்கர் மறைவுக்கு பிரபல கிரிக்கெட் வீரர் இரங்கல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.