முகப்பு
கிரிக்கெட்

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிக் கணக்கைத் தொடங்குமா?

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

Updated On : 3 ஏப்ரல் 2026, 7:15 pm IST
சிஎஸ்கே தொடக்க ஆட்டக்காரர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் - படம் | AP
பகிர்:

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட் செய்கிறது.

Advertisement

Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேத்யூ ஷார்ட்டுக்குப் பதிலாக பிரசாந்த் வீர் சேர்க்கப்பட்டுள்ளார் .பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் எதுவும் செய்யவில்லை.

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக தோல்வியைத் தழுவிய நிலையில், இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று வெற்றிக் கணக்கைத் தொடங்கும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்குகிறது.

summary

In the IPL match against Chennai Super Kings, Punjab Kings won the toss and elected to bowl.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.