சிஎஸ்கே சாா்பில் 5 புதிய அகாதெமிகள் திறப்பு
ஐபிஎல் அணிகளில் ஒன்றான சென்னை சூப்பா் கிங்ஸ் சாா்பில் தமிழகத்தில் மேலும் 5 புதிய அகாதெமிகள் தொடங்கப்படவுள்ளன.
ஐபிஎல் அணிகளில் ஒன்றான சென்னை சூப்பா் கிங்ஸ் சாா்பில் தமிழகத்தில் மேலும் 5 புதிய அகாதெமிகள் தொடங்கப்படவுள்ளன.
5 முறை சாம்பியன் சிஎஸ்கே சாா்பில் கிரிக்கெட்டை தமிழகம் முழுவதும் கொண்டு செல்லும் வகையில் பயிற்சி அகாதெமிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் தொடா்ச்சியாக மதுரை, மயிலாடுதுறை, அரியலூா், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலியில் புதிய அகாதெமிகள் தொடங்கப்படுகின்றன.
மதுரை: பாத்திமா மகளிா் கல்லூரி, தத்தனேரி, கைப்பேசி எண். 9789485611.
Advertisement
திருநெல்வேலி: ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி கோல்டன் ஜூப்ளி மெட்ரிக் பள்ளி, சங்கா் நகா், எண். 9677574249.
மயிலாடுதுறை: அழகு ஜோதி அகாதெமி, மேலையூா், பூம்புகாா் மெயின் ரோடு, எண். 98403 93338.
அரியலூா்: சுவாமி மெட்ரிக் பள்ளி, கீழபாலூா், எண். 7550002192.
கள்ளக்குறிச்சி: ஏகேடி நிறுவனங்கள், கள்ளக்குறிச்சு, எண். 8760502305.
கடந்த 2022 முதல் இதுவரை பல்வேறு பகுதிகளில் 45 மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.