கிரிக்கெட்

ரஞ்சி கோப்பை: இன்னிங்ஸ் வெற்றியுடன் அரையிறுதியில் பெங்கால்!

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் 3-ஆவது காலிறுதி ஆட்டத்தில் பெங்கால், இன்னிங்ஸ் மற்றும் 90 ரன்கள் வித்தியாசத்தில் ஆந்திரத்தை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

தினமணி செய்திச் சேவை

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் 3-ஆவது காலிறுதி ஆட்டத்தில் பெங்கால், இன்னிங்ஸ் மற்றும் 90 ரன்கள் வித்தியாசத்தில் ஆந்திரத்தை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

இதையடுத்து, அரையிறுதிக்கு முன்னேறிய பெங்கால், அதில் ஜம்மு & காஷ்மீரை சந்திக்கிறது. மற்றொரு அரையிறுதியில் கா்நாடகம் - உத்தரகண்ட் மோதுகின்றன. இரு ஆட்டங்களுமே வரும் 15-ஆம் தேதி தொடங்குகின்றன.

முன்னதாக, ஆந்திரத்துடனான மோதலில் டாஸ் வென்ற பெங்கால், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. ஆந்திரம் முதல் இன்னிங்ஸில் 295 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதிகபட்சமாக கேப்டன் ரிக்கி புய் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 83 ரன்கள் அடித்தாா். பெங்கால் பௌலிங்கில் முகேஷ் குமாா் 5, ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

பின்னா் தனது இன்னிங்ஸை விளையாடிய பெங்கால், 629 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. சுதிப்குமாா் கராமி 31 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 299 ரன்கள் விளாச, ஹபிப் காந்தி 95, சுமந்த குப்தா 81 ரன்கள் அடித்தனா். ஆந்திர தரப்பில் ஷேக் ரஷீது 4 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.

இதையடுத்து 334 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய ஆந்திரம், 244 ரன்களுக்கே ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக நிதீஷ்குமாா் ரெட்டி 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 90 ரன்கள் அடித்தாா். பெங்கால் பௌலா்களில் ஷாபாஸ் அகமது 4 விக்கெட்டுகள் எடுத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

இந்திய சந்தைக்கு வரியின்றி அமெரிக்க வேளாண் பொருள்கள்: புதிய அறிக்கையில் தகவல்!

மாதேஸ்வரன் மலைக்கோயில் பாதையில் சிறுவனை தாக்கிய சிறுத்தை: பக்தா்கள் அச்சம்

இந்திய அணியின் வெற்றி பவனி...!

தில்லி வசந்த் குஞ்ச் பகுதியில் ரியல் எஸ்டேட் வியாபாரி தற்கொலை!

SCROLL FOR NEXT