முகப்பு
கிரிக்கெட்

ஆஷ்லே கார்டனர் அரைசதம்; யுபி வாரியர்ஸுக்கு 208 ரன்கள் இலக்கு!

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 10 ஜனவரி, 2026 at 11:03 AM
பகிர்:

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் எடுத்துள்ளது.

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நான்காவது சீசன் நேற்று (ஜனவரி 9) கோலாகலமாகத் தொடங்கியது. இந்த தொடரில் நவி மும்பையில் நடைபெறும் இன்றையப் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டன் மெக் லேனிங் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதலில் விளையாடியது.

ஆஷ்லே கார்டனர் அரைசதம்

முதலில் விளையாடிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் கேப்டன் ஆஷ்லே கார்டனர் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 41 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அனுஷ்கா சர்மா 44 ரன்களும், சோஃபி டிவைன் 38 ரன்களும் எடுத்தனர். இறுதிக்கட்டத்தில் அதிரடி காட்டிய ஜியார்ஜியா வார்ஹம் 10 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

யுபி வாரியர்ஸ் தரப்பில் சோஃபி எக்கல்ஸ்டோன் இரண்டு விக்கெட்டுகளையும், ஷிக்னா பாண்டே மற்றும் டீண்ட்ரா டாட்டின் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி யுபி வாரியர்ஸ் அணி களமிறங்குகிறது.

summary

In the Women's Premier League cricket series, the Gujarat Giants team, batting first against the UP Warriorz, scored 207 runs for the loss of 4 wickets.

முழு கட்டுரையைப் படிக்க →