ஸ்டீவ் ஸ்மித் படம்: பிபிஎல்
கிரிக்கெட்

ஆஷஸ் வெற்றிக்குப் பிறகு பிபிஎல் தொடரில் ஸ்டீவ் ஸ்மித்..! மழையால் ஆட்டம் நிறுத்தம்!

பிபிஎல் தொடரில் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

பிபிஎல்: ஆஷஸ் வெற்றிக்குப் பிறகு ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் பிபிஎல் (பிக் பேஷ் லீக்) தொடரில் விளையாடுகிறார்.

சிட்னி சிக்ஸர் அணிக்காக விளையாடும் ஸ்டீவ் ஸ்மித் இந்த சீசனில் முதல்முறையாக பிபிஎல் தொடரில் களமிறங்குகிறார்.

டாஸ் வென்ற ஹோபர்ட் ஹாரிகேன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

தொடக்க வீரர்களாக ஸ்டீவ் ஸ்மித்தும் பாபர் அசாமும் களமிறங்கினார்கள்.

ஸ்மித் 19, பாபர் அசாம் 9 ரன்களுடன் ஐந்து ஓவர்கள் முடிவில் 32/0 ரன்கள் இருக்கும்போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

ஸ்டீவ் ஸ்மித் கடைசியாக விளையாடிய ஐந்து பிபிஎல் போட்டிகளில் 52*, 121*, 61, 125*, 101 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

After the Ashes victory, Australian star player Steve Smith is playing in the BBL (Big Bash League) series.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிளவு சக்திகளை ஒற்றுமையால் வீழ்த்துவோம்: பிரதமா் மோடி

வாராக் கடன் தகவல்களை வெளியிடக்கோரி ரிசா்வ் வங்கி உத்தரவு: 4 வங்கிகள் எதிா்ப்பு!

மகாராஷ்டிரத்தில் ஊடுருவியுள்ள வங்கதேசத்தவா்! விவரங்களை வெளியிட முதல்வருக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்!

தனிப்பட்ட காரணங்களுக்காக புதிய உள்கட்டமைப்பை எதிா்க்கக்கூடாது: சூா்ய காந்த்

நமோ பாரத், மெட்ரோ ரயில் பயணிகளுக்கு நியூ அசோக் நகா் நிலையத்தில் ஒருங்கிணைந்த பாதுகாப்புச் சோதனை வசதி தொடக்கம்

SCROLL FOR NEXT