டி20 உலகக் கோப்பைக்கான நெதர்லாந்து அணி அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான நெதர்லாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான நெதர்லாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 வரை நடைபெறவுள்ளது. டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக அனைத்து அணிகளும் தங்களை தீவிரமாக தயார்படுத்தி வருகின்றன. கிட்டத்தட்ட அனைத்து நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் உலகக் கோப்பைக்கான தங்களது அணிகளை அறிவித்துவிட்டன.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான நெதர்லாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
டச்சு ஸ்குவாட் என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட அணியை ஸ்காட்டெட் வார்ட்ஸ் கேப்டனாக வழிநடத்துகிறார்.
நெதர்லாந்து அணி விவரம்
ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), காலின் ஆக்கர்மேன், நோவா க்ரோஸ், பாஸ் டி லீட், ஆர்யன் தட், பிரெட் கிளாசென், கைல் க்ளெய்ன், மைக்கேல் லெவிட், சாக் லயன்-கேஷெட், மேக்ஸ் ஓ'டவுட், லோகன் வான் பீக், டிம் வான் டெர் கியூக்டன், ரோல்ஃப் வான் டெர் மேர்வ், பால் வான் மேக்ரென், சஹிப் ஷூல்பிகர்.
Netherlands Men’s T20 World squad
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.