ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு இன்னும் ஒரு மாதத்துக்கு குறைவாக உள்ள நிலையில், அந்தத் தொடருக்கு முன்னதாக அணிகள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக ஆப்கானிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவிருக்கிறது.
இந்தத் தொடர் வருகிற ஜன.19 ஆம் தேதி தொடங்கி ஜன.22 வரை நடைபெறுகிறது. இவ்விரு அணிகளுக்கும் பொதுவான ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை திடலில் போட்டிகள் நடைபெறுகின்றன.
மேற்கிந்தியத் தீவுகள் அணி கேப்டன் ஷாய் ஹோப், ரோஸ்டன் சேஸ், அகீல் ஹுசைன், ஷெர்பேன் ரூதர்போர்டு உள்ளிட்டோர் தென்னாப்பிரிக்கா 20 லீக் சுற்றில் விளையாடி வருவதால் அவர் இந்தத் தொடரில் இடம்பெறவில்லை.
16 பேர் கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு பிரண்டன் கிங் தலைமை வகிக்கிறார்.
காயத்தில் இருந்து மீண்ட ஷமர் ஜோசப், எவின் லீவிஸ் ஆகியோர் மீண்டும் அணியில் இணைந்துள்ளனர். காயம் காரணமாக அல்சாரி ஜோசப் அணியில் சேர்க்கப்படவில்லை.
மேற்கிந்தியத் தீவுகள் அணி விவரம்
பிரண்டன் கிங் (கேப்டன்)
அலீக் ஆதனேஷ்
கீசி கார்டி
ஜான்சன் சார்லஸ்
மேத்யூ ஃபோர்டே
ஜஸ்டின் கிரீவ்ஸ்
ஷிம்ரன் ஹெட்மையர்
ஆமிர் ஜாங்கோ
ஷமர் ஜோசப்
எவின் லீவிஸ்
குடகேஷ் மோதி
ஹாரி பியர்
குயிண்டன் ஷாம்ப்சன்
ஜேய்டன் ஷீல்ஸ்
ராமன் சைமண்ட்ஸ்
ஷமர் ஸ்பிரிங்கர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.