அரைசதம் அடித்த மகிழ்ச்சியில் அபிஷேக் சர்மா.  படம்: ஏபி
கிரிக்கெட்

சதத்தை தவறவிட்ட அபிஷேக் சர்மா..! இந்தியா 238 ரன்கள் குவிப்பு!

இந்தியா - நியூசிலாந்துக்கு இடையேயான முதல் டி20 போட்டி குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்தது.

நாக்பூரில் நடைபெறும் முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். குறிப்பாக, அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 22 பந்தில் தனது ஏழாவது அரைசதத்தை நிறைவு செய்தார்.

சதம் அடிப்பாரென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அபிஷேக் சர்மா 84 ரன்களில் (35 பந்துகள்) ஆட்டமிழந்தார்.

ரிங்கு சிங், சூர்யகுமார், ஹார்திக் பாண்டியா அவர்களின் பங்கிற்கு தலா 44*, 32, 25 ரன்கள் அடித்தார்கள்.

நியூசிலாந்து சார்பில் ஜேக்கப் டஃபி, கைல் ஜேமிசன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

டேரில் மிட்செல் வீசிய கடைசி ஓவரில் ரிங்கு சிங் 21 ரன்கள் அடித்தார்.

Abhishek Sharma missed out on a century! New Zealand set a target of 230 runs!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரும்புகளை சாலையில் போட்டு விவசாயிகள் போராட்டம்

அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு பிரதமரின் ஓய்வூதியத் திட்டம்

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்: திருச்சி மாவட்டத்துக்கு விருது

சூரியூா் ஜல்லிக்கட்டில் குளறுபடிகள்: 4 போ் மீது வழக்கு

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT