இந்தியர்களைப் போல மோசமான வார்த்தையில் விமர்சித்தேனா? முகமது ஆமிரின் கணிப்பும் விளக்கமும்!
அபிஷேக் சர்மா குறித்த முன்னாள் பாகிஸ்தான் வீரரின் சரியான கணிப்பும் அதற்கான விளக்கமும் குறித்து...
இந்தியாவின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா சிறந்த பேட்டரல்ல எனக் கூறிய முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது ஆமிரின் விடியோ வைரலாகி வருகிறது.
அந்த விடியோ வைரலான நிலையில், தான் தவறான வார்த்தை எதுவும் சொல்லவில்லை என்றும் அதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளார்.
இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா இந்த டி20 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக மூன்று டக் அவுட் மற்றும் மோசமான தொடக்கத்தையே அளித்துள்ளார்.
Advertisement
Advertisement
சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் 76 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வியுற்றது.
இந்தப் போட்டிக்கு முன்பாகவே பாகிஸ்தானின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் அபிஷேக் சர்மா குறித்தும் இந்திய அணி குறித்தும் தனது கணிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்திய அணி மற்றும் அபிஷேக் சர்மா குறித்து முகமது ஆமிர் பேசியிருப்பதாவது:
முகமது ஆமிரின் கணிப்பும் விளக்கம்
அபிஷேக் சர்மாவிடம் பேட்டிங்கில் டிஃபென்ஸ் தொழில்நுட்பம் இல்லை. ஒரு பேட்டரால் பந்தினை நிறுத்த முடியாவிட்டால் அவரை என்னவென்று அழைப்பது?
சரியாக பந்தின் வரிசைக்கு அதைத் தடுக்க முடியாத ஒருவரை என்னவென்று அழைப்பது? ஸ்லோகர் (கண்மூடித்தனமாக பேட்டினை சுற்றுபவர்) என்றுதானே சொல்ல முடியும்.
இந்திய அணி இதுமாதிரியான பேட்டர்களை வைத்திருந்தால் நிச்சயமாக அரையிறுதிக்குச் செல்லாது. தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளே செல்லும் என்றார்.
அவர் கூறியதுபோலவே தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வியுற்றது.
மோசமான வார்த்தையில் விமர்சித்தேனா?
அதன்பிறகு ஆமிர், “இந்த உலகத்தில் பல நூறு மக்கள் இருக்கிறார்கள். அனைவருக்கும் ஒரே கருத்து இருக்காது. அடுத்தவர்கள் கருத்தை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
சில முன்னாள் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களை கொச்சையான வார்த்தைகளில் பேசி அவமதித்துள்ளார்கள். நாங்கள் அப்படி செய்ததில்லை. நான் எப்போதாவது இந்தியாவுக்கு எதிராக மோசமான வார்த்தையைப் பேசி இருக்கிறானா? எனக் கூறியுள்ளார்.
இந்தியாவிலேயே பலரும் முகமது ஆமிரின் கருத்துக்கு வரவேற்பு அளித்து வருகிறார்கள்.
இந்திய அணி அடுத்ததாக, ஜிம்பாப்வே உடன் பிப்.26ஆம் தேதி சென்னையில் சூப்பர் 8 சுற்றில் விளையாடுகிறார்கள்.
India legends abuse Pakistan: Mohammad Amir responds to criticism after viral comments on Abhishek Sharma
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.