91 பந்துகளில் 233 ரன்கள் குவித்த அபிஷேக் சர்மா ருத்ர தாண்டவம்!
இந்திய வீரர் அபிஷேக் சர்மாவின் அதிரடியான ஆட்டம் குறித்து...
இந்திய வீரர் அபிஷேக் சர்மா 91 பந்துகளில் 233 ரன்கள் குவித்த அபிஷேக் சர்மா ருத்ர தாண்டவம் ஆடி இருக்கும் செய்தி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாபைச் சேர்ந்த அபிஷேக் சர்மா (25 வயது) ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணியில் விளையாடி பிரபலமானார். தற்போது, இந்திய டி20 அணியின் தொடக்க வீரராகவும் விளையாடி வருகிறார்.
பஞ்சாபில் மாவட்ட அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரில்தான் அபிஷேக் சர்ம இந்த அபாரமான ஆட்டத்தை ஆடியுள்ளார்.
Advertisement
Advertisement
அமிர்தசர்ஸ் மென் சீனியர் அணிக்காக விளையாடும் அபிஷேக் சர்மா தாரன் தாரன் மென் சீனியர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 91 பந்துகளில் 233 ரன்கள் குவித்துள்ளார். இதில் 25 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகள் அடங்கும்.
அமிர்தசர்ஸ் அணி 50 ஓவர்களில் 533/8 ரன்கள் குவித்தது. இதில் அபிஷேக் சர்மா 233, அபய் சௌதரி 91 ரன்கள் குவித்தார்கள்.
சமீபகாலமாக டி20 தொடர்களில் சுமாராக விளையாடி வந்த அபிஷேக் சர்மா மீண்டும் இந்திய அணியில் நிரந்தரமாக இடம்பிடிக்க கடினமாக உழைத்து வருகிறார்.
அடுத்ததாக, இந்திய அணி அக்டோபரில் மேற்கிந்தியத் தீவுகளுடன் டி20 தொடரில் விளையாட இருக்கிறது.
Abhishek Sharma's rampage: 233 runs off 91 balls!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.