இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பற்றி காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறியது சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
இந்தியாவில் பிரதமருக்கு அடுத்து கடினமான வேலையாக இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக இருப்பது என எம்பி சசி தரூர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் எம்பி சசி தரூர் மிகப் பெரிய கிரிக்கெட் ரசிகராக இருக்கிறார். அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் கிரிக்கெட் தொடர்பான பதிவுகளைப் பதிவிடுவார்.
இந்நிலையில், நேற்று நாக்பூரில் இந்தியாவும் நியூசிலாந்தும் முதல் டி20 போட்டியில் விளையாடின. இந்தப் போட்டியைப் பார்க்க சசி தரூர் நாக்பூர் திடலுக்குச் சென்றிருந்தார்.
இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 238 ரன்கள் குவிக்க, அடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி 190 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
கம்பீர் தலைமையில் டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் இந்திய அணி மோசமாக விளையாடி நியூசிலாந்திடம் தோல்வியுற்றதால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் வந்தன.
கம்பீரைச் சந்தித்த புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த சசி தரூர் கூறியதாவது:
நாக்பூரில், எனது முன்னாள் நண்பர் கௌதம் கம்பீரைச் சந்தித்து வெளிப்படையான உரையாடல் நடத்தியதில் மகிழ்ச்சி.
இந்தியாவில் பிரதமருக்கு அடுத்து மிகவும் கடினமான வேலையைச் செய்து வருகிறார். பல லட்சக்கணக்கானவர்களால் தினமும் விமர்சனத்துக்கி வருகிறார். ஆனாலும் அவர் அமைதியாக அச்சமற்று நடந்து வருகிறார்
கம்பீரின் தலைமைப் பண்பு மற்றும் அவரது திடமான முடிவிற்காகப் பாராட்டுகிறேன். அவருக்கு எல்லாமே வெற்றியடைய வாழ்த்துகள். இன்றிலிருந்தே தொடங்கட்டும்! எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.