சசி தரூர் கோப்புப் படம்
இந்தியா

75% வரியில் எந்த இந்திய நிறுவனமும் ஏற்றுமதி செய்ய மாட்டார்கள்: சசி தரூர்

அமெரிக்காவின் 75% வரியைக் குறிப்பிட்டு, எந்த இந்திய நிறுவனமும் ஏற்றுமதி செய்ய மாட்டார்கள் என்று சசி தரூர் கவலை

இணையதளச் செய்திப் பிரிவு

அமெரிக்காவின் 75 சதவிகித வரியைக் குறிப்பிட்டு, எந்த இந்திய நிறுவனமும் ஏற்றுமதி செய்ய மாட்டார்கள் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கவலை தெரிவித்தார்.

இந்தியா மீது ஏற்கெனவே 50 சதவிகித வரியை அமெரிக்கா விதித்திருந்தது. இந்த நிலையில், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 25 வரி என்ற அமெரிக்காவின் அறிவிப்பால், இந்தியா மீது மேலும் 25 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு, மொத்தமாக 75 சதவிகிதம் என்றாகி விட்டது.

இந்த நிலையில், அமெரிக்காவின் வரிவிதிப்பு குறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பேசுகையில், "ஏற்கெனவே 50 சதவிகித வரி பிரச்னையாக இருந்தது. தற்போது, ஈரானிய பொருளாதாரத் தடையால் மேலும் 25 சதவிகிதம் அதிகரித்து, 75 சதவிகிதமாகி விட்டது. இதையும் இந்தியா எதிர்கொள்ளும்.

அதே சமயத்தில், எந்த இந்திய நிறுவனமும் 75 சதவிகிதத்துக்கு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதில் சாத்தியம் இல்லை.

அரசாங்கம் என்ன சொல்கிறது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால், எனது பார்வையில் இது மிகவும் தீவிரமானது.

புதிய அமெரிக்க தூதர் இருநாட்டு அரசாங்கத்துக்கும் கடினமாக உழைத்து, வர்த்தக ஒப்பந்தம் குறித்து மிக விரைவாக ஒரு சந்திப்பைக் கொண்டு வருவார் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

Congress MP Shashi Tharoor On United State's Iran Tariffs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரானில் உள்ள இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம்!

ஆமிர் கான் தயாரிப்பில் பாலிவுட்டில் களமிறங்கும் சாய் பல்லவி!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! 22 காளைகளை அடக்கி வலையங்குளம் பாலமுருகன் முதலிடம்!

டிரம்ப் உத்தரவால் அமெரிக்காவில் குடியேற விரும்பும் 75 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு சிக்கல்!

திருச்சி சூரியூரில் ரூ. 3 கோடியில் புதிய ஜல்லிக்கட்டு திடல் - துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT