முகப்பு
கிரிக்கெட்

2-வது ஒருநாள்: இலங்கை அணி 219 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 219 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Updated On : 24 ஜனவரி, 2026 at 12:28 PM
பகிர்:

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 219 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து - இலங்கை இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று (ஜனவரி 24) நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

முதலில் விளையாடிய இலங்கை அணி 49.3 ஓவர்களில் 219 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் சரித் அசலங்கா 45 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, தனஞ்ஜெயா டி சில்வா 40 ரன்களும், பவன் ரத்நாயகே 29 ரன்களும் எடுத்தனர். பதும் நிசங்கா மற்றும் குசல் மெண்டிஸ் தலா 26 ரன்கள் எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் ஜேமி ஓவர்டான், அடில் ரஷீத் தலா மற்றும் ஜோ ரூட் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். லியம் டாஸன், வில் ஜாக்ஸ் மற்றும் ரிஹான் அகமது தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.

summary

In the second One Day International against England, the Sri Lankan team, batting first, was all out for 219 runs.

முழு கட்டுரையைப் படிக்க →