19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் 136 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் 6 சுற்றின் இன்றையப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
முதலில் விளையாடிய வங்கதேசம் 38.1 ஓவர்களில் 136 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அந்த அணியில் ரிஃபாத் பெக் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, முகமது அப்துல்லா 25 ரன்களும், கேப்டன் முகமது அஸிஸுல் ஹக்கீம் தமிம் 20 ரன்களும் எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில் செபஸ்டின் மோர்கன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ரால்ஃபி ஆல்பர்ட், மன்னி லம்ஸ்டன் தலா இரண்டு விக்கெட்டுகளையும், அலெக்ஸ் கிரீன், ஃபர்ஹான் அகமது மற்றும் ஜேம்ஸ் மிண்டோ தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.