முகப்பு
கிரிக்கெட்

யு19 உலகக் கோப்பை: கேப்டன் அரைசதம்; ஜிம்பாப்வேவுக்கு 254 ரன்கள் இலக்கு!

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் 253 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2026 at 12:57 PM
- படம் | வங்கதேச கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
பகிர்:

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் 253 ரன்கள் எடுத்துள்ளது.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி உலகக் கோப்பைத் தொடரில் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

கேப்டன் அரைசதம்; 254 ரன்கள் இலக்கு!

முதலில் விளையாடிய வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் முகமது அஸிஸுல் ஹக்கிம் தமிம் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 87 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, முகமது ரிஸான் ஹொசைன் 68 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். ஸவாத் அப்ரார் 25 ரன்களும், அல் ஃபகத் 23 ரன்களும் எடுத்தனர்.

ஜிம்பாப்வே தரப்பில் சிமுகோரா, ஷெல்டான் மஸ்விட்டோரேரா மற்றும் மைக்கேல் பிலிக்நட் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். பனாசி மசாய் மற்றும் வெப்ஸ்டன் மதிதி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி விளையாடி வருகிறது.

summary

In the Under-19 World Cup match against Zimbabwe, Bangladesh, batting first, scored 253 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.