19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 193 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் 6 சுற்றின் இன்றையப் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்தது.
முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 193 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஆஸ்மான் சதாத் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 107 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அஸிஸுல்லா மிலாகில் 43 ரன்களும், உஸாயிருல்லா நியாஸாய் மற்றும் ரூஹுல்லா அராப் தலா 22 ரன்களும் எடுத்தனர்.
இலங்கை தரப்பில் குகதாஸ் மதுலன் மற்றும் விரன் சமுடிதா தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். செத்மிகா, ரஷித் நிம்ஷாரா மற்றும் சமிகா ஹீனாடிகலா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.