டி20 உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட அமெரிக்க, யுஏஇ அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டிகள் அனைத்தும் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகின்றன. உலகக் கோப்பைத் தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், போட்டிக்கு அணிகள் தயாராகி வருகின்றன.
இந்த நிலையில் டி20 உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட அமெரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கேப்டனாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நட்சத்திர வீரர் மோனங்க் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். 2024 உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட அலி கான், சௌரப் நேத்ராவல்கர், ஆன்ட்ரிஸ் கூஸ் ஆகியோர் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளனர்.
முழு அணி விபரம்: மோனங்க் படேல் (கேப்டன்), ஜெஸ்ஸி சிங்(துணைக் கேப்டன்), ஆன்ட்ரிஸ் கூஸ், ஷெஹான் ஜெயசூர்யா, மிலிந்த் குமார், ஷயான் ஜஹாங்கீர், சாய் தேஜா முக்கம்மலா, சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி, ஹர்மீத் சிங், நோஸ்துஷ் கென்ஜிகே, ஷேட்லி வான் ஷல்க்விக், சௌரப் நேத்ராவல்கர், அலி கான், முகமது மொசின், ஷுபம் ரஞ்சனே.
குரூப் ஏவில் இடம்பெற்றுள்ள அமெரிக்கா தனது முதல் போட்டியில் பிப்ரவரி 7ஆம் தேதி இந்தியாவைச் சந்திக்கிறது. இதேபோல் 15 பேர் கொண்ட ஐக்கிய அரபு அமீரக அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் டி பிரிவில் இடம்பெற்றுள்ள ஐக்கிய அரபு அமீரக அணி தனது முதல் போட்டியில் பிப்.10ஆம் தேதி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
முழு அணி விபரம்: முகமது வசீம் (கேப்டன்), அலிஷன் ஷரபு, ஆர்யன்ஷ் சர்மா, துருவ் பராஷர், ஹைதர் அலி, ஹர்ஷித் கௌசிக், ஜுனைத் சித்திக், மயங்க் குமார், முகமது அர்ஃபான், முகமது ஃபாரூக், முகமது ஜவாதுல்லா, முகமது சோஹைப், ரோஹித் கான், சோஹைப் கான், சிம்ரஞ்சித் சிங்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.